நாட்டை வெளிநாடுகளுக்கு காட்டிக்கொடுக்கும் அரசு!

இந்த நாட்டை ஆட்சி செய்த கடந்த காலத் தலைவர்கள், நாட்டின் மீது அதிக பற்றுக் கொண்டவர்களாகவும், எனது நாடு என்ற சிந்தனை உடையவர்களாகவும் இருந்தார்கள் எனவும், ஆனால் தற்போது ஆட்சி செய்பவர்கள், நாட்டை காட்டிக் கொடுக்கும் துரோகச் செயலை முன்னெடுக்கின்றனர் எனவும், பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று, பாராளுமன்றத்தில் இடம்பெற்ற, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மீதான விவாதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த நாட்டினை ஆட்சி செய்த அனைத்து தலைவர்களும், நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்களாக, எமது நாடு என்ற எண்ணம் உடையவர்களாக இருந்தார்கள்.

இன்று பாருங்கள், அம்பாந்தோட்ட துறைமுகத்தினை அமைத்தார்கள் வெளிநாட்டுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
அதேபோன்று மத்தள விமான நிலையத்தினை கொடுக்க இருக்கின்றார்கள். எண்ணை குதங்களை கொடுக்க இருக்கின்றார்கள். துறைமுகம் அனைத்தும் கொடுத்து முடிந்துவிட்டது.

சோப உடன்படிக்கை தற்போது அண்மையில் வர இருக்கின்றது. இவ்வாறான தவறினை இழைத்துவிட்டு, அதிலிருந்து தப்பித்துச் செல்ல ஐக்கிய தேசியக் கட்சியினால் முடியாது.

நாளை அல்லது நாளை மறுதினம் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துவிட்டு, இவற்றினை இவர் செய்யவில்லை, அதனை அவர் செய்தார் என்று சொல்லி தப்பிக்க பார்ப்பீர்கள். அவ்வாறு சொல்லுபவர்கள் உங்கள் பக்கத்தில் இருக்கின்றார்கள்.

இந்த செயற்பாடுகளுக்கு நீங்கள் எதிரானவர்கள் என்றால், எதிரானவர்கள் என்று சொல்ல வேண்டும்.
ஆனால் அவ்வாறு இல்லை.

கட்சியில் அனைவரும் சம்மதம் வெளியிட்டு விட்டீர்கள். நான் இதில் சம்பந்தப்படவில்லை என்று யாரும் கூறிவிட முடியாது.

எனவே இந்த நாட்டை காட்டிக்கொடுக்கும் துரோக வேலை ஒரு நிகழ்ச்சி நிரலின்கீழ்தான் முன்னோக்கி செல்கின்றது. என குறிப்பிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!