உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி என்ற வகையில் பாரிய பணிகளை மேற்கொண்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சில தினங்களில் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களை கைது செய்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் பல ஜனாதிபதியால் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டில் எந்த சம்பவங்களும் இடம்பெறவில்லை என்றும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.
தாக்குதலில் சேதமடைந்த அனைத்து ஆலயங்களையும் மீண்டும் கட்டியெழுப்பும் பணி ஜனாதிபதியின் உத்தரவுப் படி இடம்பெற்றதாகவும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.