மைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்க மஹிந்தவிற்கு ஸ்ரீ.சு.க அழைப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதியாக்க, எதிர்கட்சித் தலைவர் முன்வர வேண்டும் என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதி ஆக்குவதற்கு எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச முன்வர வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் டீ.எம்.சுஜித் புஸ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இந்த வேண்டுகோளினை முன்வைத்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட சுஜித் புஸ்பகுமார,
“பொதுஜன பெரமுன சொல்கிறது எம்மிடம் ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்கள் கைவசம் இருக்கின்றார்கள் என்று. அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சி சொல்கின்றது எம்மிடம் ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்கள் இருக்கின்றார்கள் என்று. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் ஒரே ஒரு ஜனாதிபதி வேட்பாளர் மட்டுமே இருக்கின்றார். அவர்தான் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்கள். ஆகவே எங்களது கட்சி மட்டும்தான் ஒற்றுமையான ஒரே கொள்கையை கொண்ட கட்சி என நான் நினைக்கின்றேன். எங்கள் கட்சிக்குள் குழப்பமான நிலமைகள் இல்லை உள்ளே இருந்து பிரிவினையை தூண்டும் நபர்கள் இல்லை. ஆகவே எங்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மட்டும்தான் ஒருமித்த கருத்துடன் இருக்கும் ஒரே ஒரு கட்சி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கம்பரலிய ஊடாக நாட்டின் ஆட்சியை மாற்றிவிடலாம் என்று கனவு காண்கின்றார். தன்னுடய கிராம மட்ட அமைப்பாளர்களுக்கு கம்பரலிய ஊடாக ஒப்பந்தங்களை வழங்கி அவர்களை தம்வசப்படுத்தி வெற்றியடையலாம் என்று நினைக்கின்றார். நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக கம்பரலிய திட்டம் கொண்டுவரப்படவில்லை மாறாக பிராந்தியம் தோறும் தமது கட்சி அமைப்பாளர்களை அபிவிருத்தி செய்வதற்காகவே கம்பரலிய திட்டத்தினை ரணில் கொண்டு வந்திருக்கின்றார். அதற்கு சிறந்த உதாரணமாக இருப்பது சமுர்த்தி முத்திரை. ஐக்கிய தேசிய கட்சி அங்கத்தவர்களுக்கு மாத்திரமே சமுர்த்தி வழங்கப்பட்டிருக்கின்றது. எமது கிராமத்தில் வாழ்கின்ற கஸ்டப்பட்டவர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவாளர்கள் என்பதன் காரணமாக சமுர்த்தி முத்திரை வழங்கப்படவில்லை. எனவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்களுக்கு ஒன்றினை கூறிவைக்க விரும்புகி;ன்றோம். ஜனாதிபதித் தேர்தல் ஒன்று வரத்தான் போகின்றது. ரணில் தலமையிலான உங்கள் கட்சி ஒன்றல்ல இரண்டல்ல நான்காக பிரிந்து உடைவடைந்து போய்விட்டது. எனவே பொதுஜன பெரமுனவிடமும் தற்போதய எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஒன்றை சொல்ல விரும்புகின்றோம். உங்கள் புத்தியை பாவித்து முடிவு எடுங்கள். மைதிரிபால சிறிசேன ஜனாதிபதியுடன் ஐக்கிய மக்கள் சுணதந்திர கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து கைகோர்த்து ஜனாதிபதித் தேர்தலினை வெற்றி கொள்வோம் அதனை விடுத்து உங்கள் பின்னால் சிலர் கூறும் விசமத்தனமான முடிவுகளுக்கு எடுப்பட்டு நீங்கள் பாதாளத்திற்கு செல்ல வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவிடம் கேட்டுக்கொள்கின்றோம். அதனால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் என்பதை ஞாபகப்படுத்துகின்றோம்.” என குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!