புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி நூல் வழங்கி வைப்பு!

டான் குழுமத்தினால் பிரத்தியேகமாக முன்னணி ஆசிரியர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பயிற்சிப் புத்தகம் நேற்றைய தினம் வடமராட்சி கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

டான் குழுமம் தனது கல்விச் செயற்பாடுகளை வருடாந்தம் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்கின்ற நிலையில், 2019 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி எதிர்பார்க்கை வினாக்கள் அடங்கிய புலமைப் பரிசில் பரீட்சை வழிகாட்டி நூலினை வெளியிட்டுள்ளது.

குறித்த பயிற்சிப் புத்தகமானது வடக்கு மாகாணத்தில் உள்ள கஸ்டப் பிரதேச பாடசாலைகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கும்,  மட்டக்களப்பு மற்றும் மலையகத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கும் விநியோகிக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினம் வடமராட்சி கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு டான் குழுமத்தினால் வெளியிடப்பட்டுள்ள 5ஆம் தர புலமைப்பரிசில் பயிற்சி புத்தகம் வழங்கி வைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!