போதை பொருட்களின் மத்திய நிலயம் வெலிக்கடை சிறைச்சாலை : ஜனாதிபதி

நாட்டில் சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதில், முக்கிய சவாலாக விளங்கும் மத்திய நிலையமாக, இன்று வெலிக்கடைச் சிறைச்சாலை மாறியிருப்பதாக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று, மினுவாங்கொடை ரெஜீ ரணதுங்க விஞ்ஞான கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அண்மையில், கடற்படையினரால் கடலில் வைத்து 270 கிலோ கிராம் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டவர்களின், கையடக்கத் தொலைபேசிகளை பரிசோதனை செய்த போது, அந்த நடவடிக்கை, வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து நெறிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

அது தொடர்பான விசேட விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தற்போது மேற்கொள்ளப்படுகின்றது.
சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதில் முன்னுரிமைப்படுத்த வேண்டிய விடயம் கல்வியாகும்.

இலவச கல்வியின் காரணமாக, இன்று நாட்டில் அனைத்து பிள்ளைகளினதும் கல்வி உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு வருட காலப்பகுதியில், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், இலவசக் கல்வியை பலப்படுத்துவதற்கு, விசேட நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொண்டுள்ளோம்.

இன்று அரசியல் துறையிலும் சமூகத்திலும் குற்றமிழைத்து வருகின்றவர்கள், எனக்கு எதிராக திரும்பியிருப்பது, நான் குற்றங்களுக்கு எதிராக இருப்பதன் காரணத்தினாலாகும்.

ஊழல், மோசடி, திருட்டு மற்றும் நாட்டினதும் பிள்ளைகளினதும் எதிர்காலத்தை சீரழிக்கும், அனைத்து வகையான கடத்தல் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவதற்கு, நான் கடுமையான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியிருக்கின்றேன்.

எனக்கெதிராக எத்தகைய குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும், நாட்டின் எதிர்கால தலைமுறையினருக்காக சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பை கைவிடப்பபோவதில்லை.
என குறிப்பிட்டார்.

மினுவாங்கொடை ரெஜீ ரணதுங்க விஞ்ஞான கல்லூரியில் நிர்மாணிக்கப்ட்டுள்ள, ‘விஜய மைத்ரி நாயக்க தேரர்’ நினைவுக்கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கட்டடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அதனை பார்வையிட்டதுடன், அங்கு விசேட அதிதிகள் புத்தகத்தில் நினைவுக் குறிப்பொன்றை பதிவு செய்தார்.

கல்லூரிக்கு ஜனாதிபதி விஜயம் செய்ததை நினைவுகூரும் வகையில், கல்லூரி வளாகத்தில் மரக்கன்றொன்றும் நடப்பட்டது.

இந்நிகழ்வில், அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, லசந்த அழகியவன்ன, ருவான் ரணதுங்க, அஜித் பஸ்நாயக்க, ரஞ்சித் சோமவங்ச உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் உள்ளிட்ட அதிகாரிகளும், மினுவாங்கொடை ரெஜீ ரணதுங்க விஞ்ஞான கல்லூரி அதிபர் தினேஷ் சமரதுங்க மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!