அம்பாறை கள்ளீயந்தீவு இராணுவ முகாம் இருந்த பாடசாலை கட்டடங்கள் புனரமைப்பு!

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்டபட்ட திருக்கோவில் கள்ளீயந்தீவு இராணுவ முகாம் கடந்த மார்ச் மாதம் 25ந் திகதி திங்கட்கிழமை அங்கிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தற்போது இங்கு உள்ள காணி மற்றும் கட்டடங்களை புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இவ் புனரமைப்பு வேலைகளுக்காக அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவரிகளினால் சுமார் 6மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நிதியின் மூலமாக இராணுவம் பயன்படுத்தி வந்த பாடசாலை கட்டடங்கள் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் திருக்கோவில் விஸ்வதுளசி வித்தியாலயத்திற்கான விளையாட்டு மைதானமும் அமைக்கப்படவுள்ளன.

இதேவேளை ஆரம்ப நடவடிக்கையாக இராணுவம் பயன்படுத்திய முதலாம் இலக்க கட்டடம் புனரமைக்கப்பட்டு வருவதுடன் விஸ்வ துளசி வித்தியாலயத்தில் தற்காலியமாக இயங்கி வந்த முன்பள்ளி பாடசாலை எதிர்வரும் திங்கட்கிழமை(10) இக்கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதுடன் வைவப ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளதாக பாடசாலை அபிவிருத்தி சங்க நிருவாகிகள் தெரிவித்துள்ளனர்.

இவ் பாடசாலை காணியில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட்டு விஸ்வதுளசி வித்தியாலய மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு உதவ வேண்டும் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பாராளுமன்ற அமர்வுகள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் தொடர்ந்தும் கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில் இவ்வருடம் மார்ச் மாதம் 25ந் திகதி திருக்கோவில் விஸ்வதுளசி வித்தியாலய காணியில் நிலை கொண்டு இருந்த இராணுவ முகாமில் இருந்து இராணுவம் வெள்ளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!