வாக்காளர் பட்டியலில் தனது பெயர் பதிவு செய்யபடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நுவரெலியா, குனு கொட்டுவ தமிழ் வித்தியாலய அதிபர் கே.லெட்சுமன், கறுப்பு பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக, இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பிறந்த காலப்பகுதி முதல், இம்புள்பிட்டிய ஆயிரத்து 84 கிராம சேவக பிரிவில் வசித்து வருவதாகவும் தற்பொழுது 40 வயதாகும் நிலையில், உரிமை மறுக்கப்படுவதாகவும், அதிபர் கே.லெட்சுமன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில், ஆயிரத்து 84 கிராம பிரிவுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் மகிந்ததாச சிறிசேனவிடம் வினவிய போது, அவர் தனது கருத்தை பதிவு செய்தார்.
குறித்த நபரை, நான் 4 தடவைகள் தேடி அவருடைய வீட்டிற்கு சென்றேன். ஆனால் அவர் அங்கு இருக்கவில்லை.
அவருடைய விண்ணப்ப படிவத்தை வேறு எவரிடமும் வழங்க முடியாது. ஆகவே, இறுதியில் அனைவருடைய வாக்காளர் விண்ணப்ப படிவங்களையும், தேர்தல் தினைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டது.
அதனடிப்படையில், அனைத்து விண்ணப்ப படிவங்களும் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர், தனிப்பட்ட எந்தவொரு நபருடைய விண்ணப்ப படிவத்தையும் அனுப்ப முடியாது.
என ஆயிரத்து 84 கிராம உத்தியோகத்தர் மகிந்ததாச சிறிசேன குறிப்பிட்டார். (சி)