பருத்தித்துறை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

கடந்த 3 வருட காலமாக கோரிக்கை விடுத்தும், யாழ்ப்பாணம் பருத்தித்துறை வெளிச்சவீடு புனரமைத்து தரப்படவில்லை என, வடமராட்சி மீனவர் சங்கங்களின் சமாச தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பருத்தித்துறை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது, வல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதுடன், பருத்தித்துறை வெளிச்சவீடு புனரமைத்து தரப்படவில்லை என, வடமராட்சி மீனவர் சங்கங்களின் சமாச தலைவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அத்துடன், பல்வேறு கோரிக்கைகள் விடுத்த போதும், அது நிறைவேற்றப்படவில்லை எனவும், முல்லைத்தீவு வரை கடல் தடுப்பணைகள் அமைப்பதற்குரிய வேலைத் திட்டங்களையும் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையிலும், இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், வடமராட்சி மீனவர் சங்கங்களின் சமாச தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில், வீதி அபிவிருத்தி, மீள்குடியேற்றம், நீர் விநியோகம் மற்றும் மின்சார விநியோகம், போக்குவரத்து போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள், தொண்டமனாறு செல்வச்சந்நிதி கோவில் வரை செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இந்த அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில், பருத்தித்துறை பிரதேச செயலர் மற்றும் வல்வெட்டித்துறை, பருத்தித்துறை பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள், இராணுவ, கடற்படை, பொலிஸ் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!