வவுனியா புளியங்குளத்தில், வீட்டுக் கிணற்றில் இருந்து, இன்று காலை இராணுவத்தினர் ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளனர்.
இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இரர்ணுவத்தினர், பொலிஸார் இணைந்து ஆயுதங்களை மீட்கும் செயற்பாட்டை முன்னெடுத்தனர்.
இதன் போது, தமிழீழ விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும், 81 எம்.எம்.குண்டுகள் 11, ரி.56 துப்பாக்கி, மிதிவெடி உட்பட சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதி, தமிழீழ விடுதலைப்புலிகளின் வருவாய்த்துறை செயற்பட்டு வந்த பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஓமந்தை 563 ஆவது பிரிகேட்டின் கேணல் பண்டுக்க பெரேரா மற்றும் புளியங்குளம் விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி நிசந்த ஆகியோரின் தலைமையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. (சி)