நவீனமயப்படுத்தப்படும் நாட்டின் பாதுகாப்பு : டயஸ்

இலங்கையின் விமான மார்க்கம் மட்டுமன்றி தரை உட்பட கடலோரப் பகுதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் நவீனமயப்படுத்தப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் தெரிவித்துள்ளார்.

இதற்காக புதிய நவீன உபகரணங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

17ஆவது விமானப் படைத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் நேற்று மாலை கண்டிக்கு விஜயம் செய்தார்.

கண்டியில் அஸ்கிரியபீட மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்து அவர் ஆசிபெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ்,

‘ஸ்ரீலங்கா பூமியை மட்டுமன்றி எமது நாட்டு தரை, கடலோரப் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காகவும் விமானப்படை செயற்படும். விமானப் படையின் விசேஷத்துவம் என்பது, ஏனைய முப்படைகளுக்கும் அவர்களுக்கான தனிப்பட்ட விவகாரங்கள் உள்ளன.

ஆனால் விமானப்படை என்பது வான்பரப்பு மட்டுமல்லாமல், தரை மற்றும் கடலோரத்தையும் பாதுகாக்கின்ற பொறுப்பு காணப்படுகின்றது.

அவற்றுக்குத் தேவையான வேலைத்திட்டம் விமானப்படைக்கு உள்ள நிலையில் அவற்றை விருத்தி செய்வதற்காக மேலதிக விமானங்கள், படகுகளுக்கான உபகரணங்களைக் கொள்வனவு செய்யவும் எதிர்பார்க்கின்றோம். அதாவது புதிய தொழில்நுட்பம் வாய்ந்த உபகரணங்களைக் கொள்வனவு செய்ய ஆலோசித்து வருகின்றோம். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!