டிசம்பர் 7 க்குள் ஜனாதிபதி தேர்தல் : தேஷப்பிரிய

ஜனாதிபதி தேர்தல், எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதிக்குள் நிச்சயம் நடைபெறும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இன்று, கொழும்பு இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தல், இந்த வருடத்தின் நவம்பர் 9 ஆம் திகதிக்குப் பின்னரும் டிசம்பர் 8, 9 ஆம் திகதிகளுக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும்.

நவம்பர் 10 ஆம் திகதி மற்றும் டிசம்பர் 10 ஆம் திகதிகள், ஞாயிற்றுக்கிழமை என்பதால் தேர்தலை நடத்த முடியாது.
நவம்பர் 11 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை தேர்தலை நடத்த முடியாது, 14 ஆம் திகதி போயா தினம் காணப்படுகிறது.

எமது நாட்டு வாக்குச்சாவடிகளில் 30 வீதமானவை விகாரைகளாகும், ஆகவே ஜனாதிபதித் தேர்தலை நடத்தக்கூடிய, மிகவும் அருகிலான திகதியாக நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரையாக காலகட்டத்தைக் குறிப்பிட முடியும்.

இந்த இரண்டு திகதிகளில், ஏதாவது ஒரு திகதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும் என்பதை, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும், தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.

ஜனாதிபதி இந்தியாவுக்குச் சென்றிருந்த போது, ஜனாதிபதித் தேர்தல் டிசம்பர் 7 ஆம் திகதி நடைபெறும் என்பதை கூறியிருந்தார், அந்த திகதிதான் தேர்தலை நடத்தக்கூடிய இறுதித் திகதியாகும், அதனால் சிலருடைய கருத்துக்களாக தேர்தல் பிற்போடப்படலாம் என்று தோன்றுகிறது.

இருப்பினும் நியமித்த திகதிகளை விடுத்து, தேர்தலை நடத்த முடியாமல் தடுப்பதற்கு யாரால் முடியும்?
அதனை ஜனாதிபதியினால் மட்டுமே அதனை செய்ய முடியும், அது எவ்வாறு என்றால், குறித்த திகதிகளுக்கு முன்னரே தேர்தலை நடத்தலாம், ஆனால் அந்தத் திகதிகளைக் கடந்து தேர்தலை நடத்த முடியாது.

அதேவேளை, உச்ச நீதிமன்றத்தை நாடி நிலைமையை மாற்றியமைக்க முடியுமென சிலர் கூறலாம்.

ஆனால், ஜனாதிபதியே டிசம்பர் 7 ஆம் திகதி என்பதை அறிவித்திருப்பதால், உச்ச நீதிமன்றம் சென்று திகதியை மாற்றியமைக்க மாட்டார் என்பது எம்முடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இருந்து, ஊர்ஜிதப்படுத்த முடிகிறது, ஆகவே உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை ஜனாதிபதி பெற மாட்டார்.

உலக அழிவு அல்லது மிகப்பெரிய வெள்ள அனர்த்தம் ஏற்படாமல் இருந்தால், நியமித்த திகதியில் ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடைபெறும்’. என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!