உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளது.
இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்டையில், இந்திய அணிக்கு விராட் ஹோக்லி தலைமை தாங்கவுள்ளார், இந்திய அணியின் இலக்கு காப்பாளர் மகேந்திரசிங் டோனி தனது தனிப்பட்ட காரணங்களுக்கான இத் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், இந்திய அணியின் இலக்கு காப்பாளராக 21 வயதுடைய ரிசாப் பாண்ட்டிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த வருடம் இடம்பெற்ற ஜ.பி.எல் தொடரில் தோற்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக சத்திரச்சிகிச்சை செய்துகொண்ட, விருத்திமன் சஹா நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாற்று இலக்குக்காப்பாளராக அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இதேவேளை, அண்மையில் நடைபெற்று முடிந்த உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில், காயம் காரணமாக விலகியிருந்த ஷிகர் தவான், தற்போது உடல் தகுதியுடன் காணப்படுவதால் அவரும் அணிக்குள் உள்ளவாங்கப்பட்டுள்ளார்.
உலக கிண்ண போட்டியில் இடம்பெற்ற தமிழக வீரரான தினேஸ் கார்த்திக் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் நீக்கப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில், இந்தியா அணி மேற்கிந்திய தீவுகளுடன் மூன்று இருபதுக்கு-20 போட்டி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
முதலாவது இருபதுக்கு-20 போட்டி எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (சி)