தேசிய சோள உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக ஒரு கிலோ சோளத்தின் கொள்வனவு விலையை 5.00 ரூபாவினால் அதிகரிப்பதாக விவசாய அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம், தந்திரிமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாம் தற்பொழுது சோள உற்பத்தியை மேற்கொள்பவர்களுக்கு உதவி வருகின்றோம். சோள இறக்குமதியை நிறுத்துவதற்கு நாம் முயற்சித்து வருகின்றோம். சோளத்திற்கு தற்பொழுது சர்வதேச சந்தையில் நல்ல கிராக்கி உண்டு விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் சோளத்தின் விலை 45 ரூபா ஆகும். எனவே இதனை 50 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் குறிப்பிட்டார். (மு)