களுத்துறை கடற்பரப்பில் நீராட சென்ற மாணவன் காணாமல் போயுள்ளான்.

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் நீராட சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் காணாமல் போயுள்ளான். நேற்று மாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 5 மாணவர்கள் நீராடச் சென்றுள்ளதுடன், அதில் கட்டுகுருந்த பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மதுரகே சசிது மல்ஷான் எனும் மாணவன் காணாமல் போயுள்ளான்.

காணாமல் போயுள்ள மாணவனை பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து தேடி வருகின்றனர்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் கடும் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதுடன், மீனவர் சமூகத்தினரையும் அவதானமாக இருக்குமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடலுக்கு நீராடச் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!