மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்தில் புகையிரத திணைக்கள அதிகாரிகள் பயணம் செய்த சிறிய ரக புகையிரதம் தடம்புரண்ட சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
மட்டக்களப்பிலிருந்து கல்லோயா நோக்கி புகையிரத திணைக்கள அதிகாரிகள் பயணம் செய்த சிறிய ரக புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் புகையிரத தண்டவாளம் சேதமடைந்தது. இதையடுத்து மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்குச் செல்லும் பயணிகள் புகையிரத சேவை இடை நிறுத்தப்பட்டிருந்ததுடன், கொழும்பிலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பு நோக்கிச் சென்ற புகையிரதம் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் தாமதித்தே மட்டக்களப்பை அடைந்தது.
எனினும் புகையிரத பாதையின் திருத்தப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு புகையிரத சேவை வழமைபோன்று நடைபெறுவதாக புகையிரத திணைக்கள அதிகாரி தெரிவித்தார். (மு)