சந்திரயான்-2 இன்று விண்வெளிக்கு ஏவப்படும்

கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று திங்கள் கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஜூலை 15 அன்று அதிகாலை ஏவப்படுவதாக இருந்த சந்திரயான்-2 திட்டமிட்ட நேரத்துக்கு 56 நிமிடம் முன்பாக நிறுத்தப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணாக இந்தப் பயணம் நிறுத்தப்படுவதாகவும், வேறொரு தேதியில் மீண்டும் சந்திராயன்-2 ஏவப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்திருந்தது.

“100 கோடி கனவுகளை நிலவுக்கு சுமந்து செல்ல சந்திராயன்-2 தயாராக இருக்கிறது” என்று இஸ்ரோ தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 செலுத்துவாகனத்தில் திரவ எரிபொருள் நிரப்பும் பணி நடந்துவருவதாக இஸ்ரோ ட்விட்டரில் தெரிவித்துள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!