அம்பாரை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அறுகம்பை சுற்றுலாத்துறை பிரதேச கொட்டுக்கல் வீதி நேற்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன் சுற்றுலாத்துறை அபிவிருத்தி பிரதேசங்களை பார்வையிடும் நிகழ்வும் நேற்று நடைபெற்றது
அறுகம்பை பிரதேச சுற்றுலாத்துறை தலைவர் எம்.எச்.றகீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி; வனவளதுறை மற்றும் கிறிஸ்தவ கலாசாரவிவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சர் தயாகமகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
குறித்த பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில்
9 மில்லியன் ருபா செலவில் நிர்மானிக்கப்பட்டசுமார் 4 கிலோமீற்றர் தூரம் வரையில் அமைக்கப்பட்ட இவ்வீதியின் மூலமாக உல்லாசப்பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே இவ்வீதி சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மானிக்கப்பட்டது.
வருகை தந்த அமைச்சர்களுக்கு பிரதேசமக்களால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து பாதைக்கான நினைவுப்படிகத்தை அமைச்சர்கள் இணைந்து திறந்து வைத்தனர்.
பின்னர் வீதியினை சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்ததுடன் அங்கு இடம்பெற்ற கூட்டமொன்றிலும் கலந்துகொண்டனர்.
இறுதியாககொட்டுக்கல் பிரதேசத்தில் சுற்றுலாத்துறையினூடாக அபிவிருத்தி செய்யப்படவேண்டிய பிரதேசங்களையும் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இங்குஉரையாற்றிய அமைச்சர் தயாகமகே எனது அம்பாரை மாவட்டத்தில் சகரானினானால் உருவான பயங்கரவாதிகளை முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பின் மூலமே அழிக்கமுடிந்தது. அந்தவகையில் முஸ்லிம் மக்களுக்கு நன்றி சொல்கின்றேன் என்றார்.
அமைச்சர் ஜோன் அமரதுங்க உரையாற்றுகையில் எமதுஅரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் நாட்டில் பல்வேறுஅபிவிருத்திகள் நடைபெறுகின்றது. குறிப்பாக சமுர்த்தி அமைச்சை அமைச்சர் தயாகமகே பொறுப்பேற்றதன் பின்னர் 5இலட்சம் பேருக்கு புதிய சமுர்த்தி முத்திரைகளை வழங்;கியுள்ளார். மேலதிகமாகவும் அவர் வழங்கவுள்ளார். அது மாத்திரமன்றி மக்கள் அரச வங்கிகளில் சென்று கடனுக்காக அலைவது தவிர்க்கப்பட்டு இன்று சமுர்த்திவங்களினூடாக இலகுவாக கடனைபெற்றுக் கொள்கின்றனர். அதற்காக அமைச்சர் தயாகமகேவிற்கு நாட்டுமக்கள் அனைவரும் நன்றிசொல்லவேண்டும் என்றார்.