இந்தமாத இறுதியில் மலையகத்திலுள்ள தமிழ் பேசும் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாக, அமைச்சர் கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா ஹட்டன் வெலிஓயா ஊடாக வட்டவலை வரையான, செப்பனிடப்பட்ட காப்பட் வீதியினை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கபிர் ஹாசிம்,
மலையகத்தில் உள்ள தோட்ட வீதிகளை புனரமைக்க விசேடமான முறையில் வேண்டுகோள் ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் முன்வைத்துள்ளார்.
அதன் அடிப்படையில் தோட்டப்புறங்களில் உள்ள வீதிகளை செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு இந்த நாட்டை நாங்கள் பொறுப்பேற்றோம்.
74 கோடி ரூபா கடன் இருந்தது, குப்பை பிரச்சினை காணப்பட்டது, சைட்டம் பிச்சினை காணப்பட்டது, மக்களிடயே வேறுபாடு காணப்பட்டது.
இவை அனைத்திற்கும் நாங்கள் ஒரு குறுகிய காலத்தில் தீர்வினைபெற்று கொடுத்துள்ளோம்.
நாங்கள் தேசிய அரசாங்கத்தை அமைத்தோம், ஆனால் நான்கு வருடங்கள் இந்த அரசாங்கம் இருந்தபோது
திடீரென எமது காலை வாரினார்கள், ஆகையால் தான் நாங்கள் தனியான ஒரு அரசாங்கத்தை அமைத்தோம்.
2019ம் ஆண்டு ஐனவரி மாதம் தொடக்கம் இன்று வரை ஒவ்வொரு தேர்தல் பிரிவுக்கும் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் ஊடாக மூவாயிரம் மில்லியன் ரூபாக்களை ஒதுக்கியுள்ளோம்.
இதுவரை காலமும் சமுர்த்தி பெறாத ஆறு இலட்சம் பேருக்கு சமுர்த்தி முத்திரையை பெற்றுக் கொடுத்துள்ளோம்.
இந்த மாதம் முதல் சமுர்தி முத்திரை கிடைக்காதவர்களை பதிவு செயவதற்கான நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
இதேவேளை, மலையக இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கட்டாயமானது.
எதிர்வரும் 30 மற்றும் 31ஆம் திகதிகளில் மலையகத்தில் தமிழ் பேசும் பட்டதாரிகள் 16 ஆயிரம் பேருக்கு இந்த நியமனங்கள்; வழங்கப்படவுள்ளன. என குறிப்பிட்டார். (சி)