வெள்ளம் காவு கொண்ட இரு சகோதரிகளின் இறுதி சடங்கு இன்று!

நுவரெலியா ஹட்டனில் நீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த இரண்டு சகோதரிகளின் இறுதி சடங்கு இன்று இடம்பெற்றது.


ஹட்டன் அக்கரப்பத்தனை டொரிங்டன் அலுப்புவத்தை தோட்டத்தில், நீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த டொரிங்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற மாணவிகளின் இறுதிச் சடங்குகள் இன்று அலுப்புவத்தை பொது மயானத்தில் இடம்பெற்றன.

கடந்த 18ஆம் திகதி பிற்பகல் டொரிங்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற மாணவிகளான 12 வயதுடைய சகோதரிகள் இருவர், பாடசாலை விட்டு வீடு திரும்புகையில் அங்கு பாதுகாப்பற்ற நிலையில் இருந்த பாலம் ஒன்றினை கடந்து செல்ல முற்பட்டனர்.

இதன்போது, குறித்த பாலம் நிர்மாணிக்கப்பட்டிருந்த நீரோடையில் தவறி வீழ்ந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

சம்பவத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளான மதியழகன் லக்ஷ்மி, மதியழகன் சங்கீதா என்பவர்களே உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்த இரு மாணவிகளதும் இறுதிச் சடங்கு இன்றையதினம் பிற்பகல் இடம்பெற்றபோது, தோட்ட மக்கள் பலரின் கண்ணீருக்கு மத்தியில் மாணவிகளின் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!