அறநெறி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்பட்ட யோகாசனம் அடிப்படை பயிற்சி நெறி மற்றும் கல்கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற திருக்கோவில் திருஞானவாணி அறநெறிப் பாடசாலை மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு திருஞானவாணி அறநெறிப் பாடசாலையின் தலைவர் ஆ.கணேசமூர்த்தி  தலைமையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அறநெறி மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்திருந்தார்.

இந்நிகழ்வில் அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளகேற்றப்பட்டு தேவாரம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து அறநெறிக் கீதத்துடன் நிகழ்வு மங்களகரமாக ஆரம்பமாகியிருந்தன.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன், இந்த சமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சர்மிளா பிரசாந், அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுலப் பணிப்பாளர் கண.இராஜரெத்தினம், திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.விநாயகமூர்த்தி திருஞானவாணி அறநெறிப் பாடசாலை அதிபர் கலாபூசணம் செல்வி ஆ.பரமேஸ்வரி மற்றும் அறநெறி ஆசிரியைகள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (நி)

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!