பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன் பூஜித, கேமசிறி இன்று வாக்குமூலம்

ஏப்பிரல் 21ம் திகதி குண்டுத் தாக்குதலினை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பான காரணங்களை அறிந்து கொள்வதற்க்காக அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலர் கேமசிறி பெர்னான்டோ ஆகியோர் இன்று வாக்குமூலம் அளிக்கவுள்ளனர்.

விசேட தெரிவுக்குழுவின் மூன்றாவது அமர்வு இன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. முதலாவது அமர்வில் தேசிய புலனாய்வுத்துறையின் தலைவர் சிசிர மென்டிஸ் மற்றும் பாதுகாப்பு செயலர் சாந்த கோட்டேகொட ஆகியோர் வாக்குமூலம் வளங்கியிருந்தனர். இரண்டாவது அமர்வு கடந்த 4ம் திகதி இடம்பெற்றபோது சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளை ஆயராகுமாறு அழைக்கப்பட்டிருந்தனர். எனினும் அன்றயதினம் பயங்கரவாத தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாலகசில்வா மட்டுமே ஆயராகி வாக்குமூலம் வளங்கியிருந்தார். இந்த நிலையில் மூன்றாவது அமர்வு இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது. (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!