பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கர்நாடக மாநில உடுப்பி மாவட்டத்திலுள்ள மூகாம்பிகை கோவிலுக்கு தரிசனத்திற்காக செல்லவுள்ளார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ள பிரதமருடன் அவரது பாரியார் மற்றும் கட்சியில் நெருக்கமான சிலரும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூகாம்பிகை கோவிலுக்கு தரிசனத்திற்காக முன்னர் சென்றுள்ள பிரதமர் அங்கு வழிபட்டதன் மூலம் நல்ல பலன்களை பெற்றிருப்பதாகவும் அதன் அடிப்படையில் தற்போதும் அவர் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (நி)