ஐக்கிய தேசிய கட்சி ஐனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஐக்கிய தேசியக்கட்சி பல பங்காளி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆகஸ்ட் 5 ஆம் திகதி கொழும்பில் ஒரு ஒப்பந்தத்தில் கையயெழுத்திடவுள்ளதாவும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூட்டணி தேசிய ஜனநாயக முன்னணி என்று அழைக்கப்படும் எனவும், இதில் தமிழ் முற்போக்கு கூட்டணியினரும் பங்கெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. (நி)