இலங்கை பாராளுமன்றதின் முன்னாள் பிரதி சபாநாயகர் மு.சிவசிதம்பரத்தின் 96 ஆவது ஜனன தினம் நெல்லியடியில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பருத்தித்தித்துறை பிராதன வீதியில், நெல்லியடி பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் அமைந்துள்ள மு.சிவசிதம்பரத்தின் திருவுருவச் சிலைக்கு முன்பாக அனுஸ்டிக்கப்பட்ட அவரது ஜனனதின நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்
திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து, நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், எஸ்.சுகிர்தன் ஆகியோரும் மலர்மாலை அணிவித்து
வணக்கம் செலத்தினர்.
தொடர்ந்து, கரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய உறுப்பினர்கள், இலங்கை தமிழரசுக்கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், ஆர்வலர்கள் என பலரும் திரண்டு பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் மு.சிவசிதம்பரத்தின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிந்து நினைவுகூர்ந்தனர். (நி)