பங்களாதேஷ் அணிக்கு எதிராக 22 பேரைக்கொண்ட குழாம் அறிவிப்பு

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரில் கலந்துகொள்ளும் 22 பேர் அடங்கிய இலங்கை அணிக் குழாமினை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோக பூர்வமாக அறிவத்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.

முதலாவது போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதியும், இரண்டாவது போட்டி 28 ஆம் திகதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி 31 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது. இந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் பகலிரவு ஆட்டமாக கொழும்பு, ஆர்.பிரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந் நிலையில் இத் தொடருக்கான 22 பேர் கொண்ட இலங்கை குழாம் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது.

அதன்படி திமுத் கருணாரத்ன தலைமையிலான இந்தக் குழத்தில் குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டீஸ், அஞ்சலோ மெத்தியூஸ், லஹிரு திரிமான்ன, சேஹான் ஜெயசூரிய, தனஞ்சய டிசில்வா, நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க, தசூன் சானக்க, வஹிந்து ஹசரங்க, அகில தனஞ்சய, அமில அபோன்சு, லக்ஷான் சந்தகான், லசித் மலிங்க, நுவான் பிரதீப், கசூன் ராஜித, லஹிரு குமார, திஸர பெரேரா, இசுறு உதான மற்றும் லஹிரு மதுசங்க ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பங்களாதேஷ் அணியுடன் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள ஒருநாள் பயிற்சிப் போட்டியில் கலந்து கொள்ளும் 15 பேர் கொண்ட இலங்கை குழாத்தினையும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பயிற்சிப்போட்டிக்கான தலைவராக நிரோஷன் தில்வலெ்லவை நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழாமில் தனுஷ்க குணதிலக்க, ஒசத பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, சேஹான் ஜெயசூரிய, அஞ்சலோ பெரேரா, தசூன் சானக்க, லஹிரு மதுசங்க, வஹிந்து ஹசரங்க, லஹிரு குமார, விஷ்ப பெர்ணான்டோ, கசூன் ராஜித, அகில தனஞ்சய, அமில அபோன்சு மற்றும் ரமேஷ் மெண்டீஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!