கிளிநொச்சியில் தொடருந்து விபத்து:இருவர் பலி!

 

கிளிநொச்சியில் நேற்று இரவு இடம்பெற்ற புகையிரத விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடனேயே விபத்து இடம்பெற்றள்ளது.

இளைஞர்கள் இருவரும் விபத்து இடம்பெற்ற பகுதியில் தமது வீட்டுக்கு அருகில் புகையிரத கடவையில் அமர்ந்திருந்து உரையாடிக்கொண்டிருந்ததாகவும், புகையிரதம் வருவதை அவதானிக்காமையாலேயே குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டி செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் எனவும், மற்றயவர் தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்களை புகையிர அதிகாரிகள் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைத்திருந்தனர். (நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!