யாழ்ப்பாணம் கச்சேரி வீதி மூத்தவிநாயகர் கோயில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனம்தெரியாத கும்பல் ஒன்று, உடமைகளை சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
3 மோட்டார் சைக்கிளில் சென்ற 6 நபர்கள், வீட்டுக்குள் புகுந்து கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளதுடன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில், வீட்டு உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சி)