மட்டு, மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு சிரமதானம்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்தில் சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதான நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த சிரமதான நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

பல வருடங்களாக மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு, மாநகர சபையினால் சிரமதான நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுவதுடன் ஆலய உற்சவ காலத்திலும் பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!