புளியந்தீவு தெற்கில் வாசிப்பு நிலையம் திறப்பு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார வாசிப்பு நிலையத்திற்கான புதிய கட்டடம் திறப்பு நிகழ்வு நேற்றைய தினம் வட்டார மாநகர சபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின் வழிகாட்டலில் புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையத்தின் தலைவர் எம்.அருமைத்துரை தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகர சபை உறுப்பினரும், மாநகர நூலகக் குழுவின் தலைவருமான வே.தவராஜா, 18ம் வட்டார மாநகரசபை உறுப்பினர் அ.கிருரஜன், சாரணர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் பிரதீபன், உதவிப் பணிப்பாளர் கிறிஸ்டி, இராசமாணிக்கம் அறக்கட்டளையின் பணிப்பாளர் இரா.சாணக்கியன், புளியந்தீவு தெற்கு சனசமூனக நிலையத்தின் தலைவர் மற்றும் பிரதிநிதிகள், புளியந்தீவு ரிதம் இளைஞர் கழக பிரதிநிதிகள், மலரும் மொட்டுக்கள் சிறுவர் கழகப் பிரதிநிதிகள், சாரணர் அமைப்பின் பிரதிநிதிகள், புனித சிசிலியா பெண்கள் பாடசாலையின் சாரணர் ஆசிரியை, பாடசாலையின் சாரணர் மாணவ குழுவின் தலைவி செல்வி அமிர்ஷா உட்பட சாரண மாணவியர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

புனித சிசிலியா பெண்கள் பாடசாலை சாரண மாணவ குழுவின் தலைவி செல்வி அமிர்ஷா வின்சன் அவர்களின் ஜனாதிபதி விருதுக்கான செயற்திட்டம் மேற்கொள்ளும் முகமாக வட்டார மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின் பரிந்துரைக்கமைவாக பல்வேறு அமைப்புக்களின் பங்களிப்புடன் சுமார் இரண்டு லெட்சம் பெறுமதியில் மேற்படி வாசிப்பு நிலையத்திற்கான புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: KrishnaKumar

error: Content is protected !!