ரணில் அரசியல் தீர்வு என்னும் பெயரில் தேர்தல் நடவடிக்கை!

பதிவு செய்யப்படாத கட்சி ஒன்றின் பிரதிநிதியாக இருந்து கொண்டு, முஸ்லிம் அரசியல்வாதியின் பினாமியாக இருக்கும் ஒருவரே, வன்னியில் இனவாத கருத்தை பரப்பி வருவதாக, வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இன்று, வவுனியாவில் உள்ள அலுவலகத்தில், தற்கால அரசியல் நிலைமைகள் மற்றும் வன்னியிலும் இனவாத கருத்துக்கள் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாலேயே வெளியிடப்பட்டு வருவது தொடர்பாக, ஊடகவியலாளர்கள்
சிலர் கேள்வி எழுப்பிய கேள்விகளுக்கு இவ்வாறு பதில் அளித்தார்.

பிரதமர், அரசியல் தீர்வை வழங்குவதாக கூறிய கருத்து, கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும்இது ஒரு தேர்தல் கருத்தாகவே பார்க்கிறேன்.

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டங்களை பாராளுமன்றத்தில் முன்வைத்தபோது அவை கிழித்தெறியப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கம் வந்த பின் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை இருக்கும் போதே அவற்றை நடைமுறைப்படுத்தியிருக்கலாம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடனே தான் இந்த அரசாங்கம் கொண்டு செல்லப்படுகிறது, அபிவிருத்தி சம்மந்தமாக பேசினால் மக்களிற்கான தீர்வு கிடைக்காமல் போய்விடும் என கூறிய கட்சி அவர்களோடு இருக்கும் போதே தீர்வு கிடைக்கவில்லை.

இது ஒரு தேர்தல் காலம் என்பதால், நான் எதிர்பார்த்தது இரண்டு வருடங்களில் தீர்வு என்ற வார்த்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாயிலிருந்து வருமென்று.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதுதீர்வு திட்டத்தினை கிழித்தெறிந்தார். இப்போது தீர்வு என்பது தேர்தல் வார்த்தையாகவே நான் பார்க்கிறேன் தமிழ் மக்கள் இனியும் மடையர்களாக இருக்க மாட்டார்கள்.

வவுனியாவை பொறுத்தவரை குண்டுதாக்குதலின் பின்னரும் பேருந்து நிலைய சோதனைச்சாவடி அகற்றப்படவில்லை. அதை அகற்றச் சொல்லி அழுத்தம் கொடுக்கும் நிலையிலும் நாங்கள் இல்லை.

அனைத்து சிவில் அமைப்புகளும் சேர்ந்து முயற்சி எடுத்தால் அவற்றை அகற்றலாம், குண்டு வெடிக்காத இடங்களில் தான் இந்த சோதனைச்சாவடிகள் உள்ளன, இன்றைய நிலையில் வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு, இந்த சோதனைச்சாவடிகள் தேவையில்லை.

இந்ந நாட்டில் சட்டம் சரியாக செயற்படுகிறதாஎன்பதில் சந்தேகம் எழுகிறது. இந்த நிலையில் சிலர் சட்டத்தை கையில் எடுத்து நடக்கின்றார்கள்.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் போது, கன்னியா பிரச்சினைக்கும் தீர்வை கண்டுவிட்டு ஆதரவு தெரிவித்திருக்கலாம்.

பதிவு செய்யப்படாத கட்சிகளே இன முறுகலுக்கு காரணமான கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிக்கின்றன. என குறிப்பிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!