கம்பஹா, கொழும்பு, கேகாலை, கண்டி, களுத்துறை, நுவரெலியா, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அதி கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக நிலவும் மழையுடனான காலநிலைக்கமைய இரத்தினபுரி மாவட்டத்தில் 172.5 மில்லி மீற்றர் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அத்தோடு நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
பலத்த காற்று, – சிவப்பு எச்சரிக்கை
மன்னார், புத்தளம், குருணாகல், கம்பஹா, கொழும்பு, கேகாலை, கண்டி, களுத்துறை, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (சே)