மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கினிகத்தேனையில் காணாமல்போன நபர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையை அடுத்து கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை நகரில் ஹட்டன் கண்டி வீதியில் உள்ள 10 வர்த்தக நிலையங்கள் தாழிறங்கியுள்ளன.
இன்று அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் இடிந்த பகுதியில் ஒருவர் சிக்குண்டு காணாமல்போயிருந்தார்.
இந்நிலையில், குறித்த நபரை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் பொது மக்கள் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நில தாழிறக்கம் குறித்து கட்டட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பிரதேசத்தில் வசிக்கும் மக்களை அவதானதுடன் இருக்குமாறு பலதரப்பினரும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, மண்சரிவு அபாயம் நிலவும் பகுதியிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. (நி)