இந்திய மாநிலம் பீகாரில் நிலவும் சீரற்ற காலநிலையால் 67 பேர் உயிரிழந்துள்ளதுடன் 90 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு பருவ மழையால் பீகார், உத்தர பிரதேசம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் அசாமின் லட்சுமிபூர், சோனித்பூர், ஜோர்ஹாட், திப்ருகார், சிவசாகர் உள்ளிட்ட 30 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மழையால் சுமார் 90 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் மக்கள் மட்டுமின்றி வன விலங்குகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலையை அடுத்து பீகாரில் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனங்களும், பொதுமக்களும் உதவ வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். (நி)