நுவரெலியா மாவட்டம், ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில் வீதியில் மரம் ஒன்றுமுறிந்து வீழ்ந்தது.
இச்சம்பவம் இன்று அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பிரதான வீதியின் ஒரு பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால், குறித்த வீதியூடான போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக இடம்பெற்று வருகின்றது.
இம்மரத்தினை வெட்டி அகற்றும் பணியில் பிரதேசவாசிகள் மற்றும் கொட்டகலை பிரதேச சபை ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
மலையகத்தில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். (நி)