முனைப்பு ஸ்ரீலங்காவினால் தொடரும் வாழ்வாதார உதவிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முனைப்பு ஸ்ரீலங்கா அமைப்பினால் மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறவூர்ப்பற்று மற்றும் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு வவுணதீவில் நடைபெற்றது.

முனைப்பு அமைப்பின் தலைவர் மாணிக்கப்போடி சசிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முனைப்பு அமைப்பின் செயலாளர் இ.குகநாதன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பெரிய சிப்பிமடுவை சேர்ந்த கணவனை இளந்த 4 பிளைகளின் தாயான திருமதி காண்டீபன் கிருஷ்ணகுமாரி என்பவருக்கு ஆடு வழங்கப்பட்டதுடன் மரப்பாலத்தை சேர்ந்த கணவனை இளந்த 4 பிளைகளின் தாயான இளவரசன் உதயகுமாரி என்பவருக்கும் ஆடு வாழங்கி வைக்கப்பட்டது.பிள்ளைகளின் கல்வி நடவாடிக்கைக்கான வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்காகவே இந்த வாழ்வாதார உதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

கடந்தகால யுத்த சூழ்நிலையினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டினை கருத்தில்கொண்டு முனைப்பு அமைப்பு அமைப்ப பல்வேறு உதவித்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: KrishnaKumar

error: Content is protected !!