அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன், பிரிஜிங் லங்கா நிறுவனத்தினால், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை மேம்படுத்தும் வகையில், மன்னார் மாந்தை மேற்கில் ஆரோக்கியா உணவகம், கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வண்ணா குளம் பகுதியில் அமைக்கப்பட்ட ஆரோக்கியா உணவகம் மற்றும் கல்வி நிலையத்தை, இலங்கை மற்றும் மாலைதீவிற்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிற் கோலி, இன்று வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலக பிரிவில் உள்ள, வண்ணா குளத்தைச் சேர்ந்த பெண்களினால், உணவகம் முகாமைத்துவம் செய்யப்படவுள்ளது.
போரினால் கணவனை இழந்த பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள், வலுவிழந்த கணவர்களுடன் வாழும் பெண்கள், தொடர்ச்சியாக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வகையில், ஆரோக்கியா உணவகம் மற்றும் கற்றல் வள நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில், மாந்தை பிரதேச சபை தலைவர், ப்ரிஜிங் லங்கா ஊழியர்கள் உட்பட அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த கற்றல் வள நிலையத்தின் ஊடாக, வேலைவாய்பை பெற்ற பெண்களுக்கு, கணினி மற்றும் சமையல் தொடர்பான கற்கை நெறிகளும் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றது. (சி)