ஊழல்களில் முதன்மையானவர் மங்கள : பாலித் தேரர்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க காலம் முதல், தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வரையான காலப்பகுதியினுள், அமைச்சர் மங்கள சமரவீர வகித்த அமைச்சுக்களில் இடம்பெற்ற ஊழல்கள் ஏராளமானது எனவும், நாட்டில் ஊழல் மோசடி செய்தவர்களில் முதன்மையானவராக மங்களச மரவீரவே இருக்கின்றார் எனவும், நுகேகொட தீனியாவல பாலித் தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த போதும், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போதும், தற்போது எமது ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் காலத்திலும், மங்கள சமரவீர பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சுக்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் என்னிடம் 47 ஆவணங்கள் இருக்கின்றன.

அவற்றில் பலவற்றினை என்னால் கூற முடியும்.

பேருவளை பிரதேசத்தில், மங்கள அவரது சகா துசித கல்லொழுவ சமீர ஆகியோர் ஒரு மாதத்திற்கு 100 இலட்சம் ரூபாவினை சம்பாரிக்கின்றார்கள்.

அந்த காலம் முதல் தற்போது வரை இவர்கள் இணைந்து ஊழல் மோசடியினை செய்து வருகின்றார்கள்.
இவர்களின் வங்கி கணக்கினை சோதனையிட்டுப் பார்த்தால், இவர்களுக்கு இருக்கும் தொடர்பு மற்றும் எத்தனை கோடி ரூபாக்களை இவர்கள் கொள்ளையிட்டு இருக்கின்றார்கள் என்பது தெரிய வந்துவிடும்.

கம்பரலிய திட்டத்திற்கான பிரச்சார நடவடிக்கைக்காக 500 பில்லியன் ரூபாவினை செலவழித்துள்ளார்கள்.

பிலிக்ஸ் என்ற நிறுவனம் ஊடாக எவ்வளவு கொமிசனை பெற்றார்கள் என்பது எமக்கு தெரியாது.
மங்கள சமரவீரவைப் போன்று உலகத்தில் யாருமே இல்லை.

எங்கவுண்ட் படித்த சான்றிதழ் உடையவர்களை நிதி அமைச்சில் இருந்து நீக்கிவிட்டு, கணக்கு பாடமே சித்தியடையாத மங்கள சமரவீரவை நிதி அமைச்சர் ஆக்கியுள்ளார்கள். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!