5-ஜீ ஸ்மாட் கம்பத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவ வேண்டாம் என வலியுறுத்தி தற்போது யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள குறித்த போராட்டமானது, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய நிலையில், யாழ்ப்பாணம் மாநகர சபையை நோக்கி போராட்டக்காரர்கள் நகர்ந்து சென்றனர்.
தொடர்ந்து யாழ்ப்பாணம் மாநகர சபை முன்றலில் வைத்து போராட்டக்காரர்களால் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் பொதுமக்களுடன் போராட்டத்தில் பங்கேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துக்கொண்டிருந்தார். இதன்போது அவரை இடைமறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தமது போராட்டத்தினை அரசியலாக்க வேண்டாம் எனத் தெரிவித்து அவரை போராட்டத்திலிருந்து வெளியேற்றினர். (நி)