நாளை (19) வௌ்ளிக்கிழமை களனி மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மின்சார சபையின் திருத்த வேலைகள் காரணமாக இவ்வாறு நீர் வெட்ட அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் அடிப்படையில் களனி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி, பேலியகொட நகர சபைக்கு உட்பட்ட பகுதி, வத்தள நகர சபைக்கு உட்பட்ட பகுதி, வத்தள பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி, தொம்போ பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி, ஜாஎல பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி, கட்டுநாயக்க மற்றும் சீதுவ நகர சபைக்கு உட்பட்ட பகுதி மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை தடுக்கும் வகையில் முற்கூட்டியே தமக்கு தேவையான நீரை சேமித்து வைக்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.( சே)