ஐ.நா.சிறப்பு அறிக்கையாளர் இன்று இலங்கை வருகை!

அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வோல் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஒன்பது நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக கிளெமென்ற் இலங்கை வருகின்றார்.

அடுத்தவருடம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 44 ஆவது அமர்வில் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காகவே அவர் இலங்கைக்கு விஜயம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் இன்றில் இருந்து 26ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளார்.

வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், நீதித்துறை, ஊடகத்துறை, சிவில் சமூக குழுக்கள், மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றையும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை குறித்த தனது பயணம் தொடர்பான விரிவான அறிக்கையை 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!