கன்னியா உள்ளிட்ட அவசர பிரச்சினைகளை பேச வேண்டும் என்ற தனது கோரிக்கையின்பேரில், நாளை காலை 11 மணிக்கு அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடாகியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பிற்கான அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட முறையில் அவர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தனது முகநூலில் சற்றுமுன் குறிப்பிட்டுள்ளார். (சி)