முகநூலில் முகம் புதைத்து முழு வாழ்வினையும் இழந்துவிடாதீர்கள் – கோடீஸ்வரன்

முகநூலில் முகம் புதைத்து முழு வாழ்வினையும் இழந்துவிடாதீர்கள் என அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவர்களிடம் வினயமாக கேட்டுக்கொண்டார்.

 

கம்பரலிய வேலைத்திட்டத்தின் ஊடாக 15 இலட்சம் ரூபா நிதிஒதுக்கீட்டில் பாடசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள வடிகான் அமைப்பு வேலைத்திட்டத்தை இன்று ஆரம்பித்து வைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறுகேட்டுக்கொண்டார்.

பாடசாலையின் அதிபர் திருமதி.சோமபாலவின் தலைமையில் இடம்பெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் மாணவர்களின் பான்ட் வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டனர். பின்னர் இடம்பெற்ற சமயவழிபாடுகளை தொடர்ந்து வடிகான் அமைப்பிற்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்தனர்.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஆர்.ஜெகநாதன் மற்றும் பிரதிஅதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.(சி)

Recommended For You

About the Author: Suhirthakumar

error: Content is protected !!