கூட்டமைப்பு என்பது கொள்கை அடிப்படையில் உருவாக வேண்டும்-சிறிநேசன் MP

தற்போது நாட்டில் தேர்தல் எனும் கதை  பரவலாக ஆரம்பாமாகியுள்ளது. இதனால் தேர்தல் திருவிழாக்கள் வருவது வழமை அந்தவகையில்தான் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய கட்சிகள் ஆரம்பிக்கும் திருவிழாக்களை தொடங்கியிருக்கின்றார்கள். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் அவரது அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை  (17ம் திகதி) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கூட்டமைப்பு என்பது கொள்கை அடிப்படையில் உருவாக வேண்டும் மாறாக பெரும் தேசிய வாதத்தின் அடிவருடிகளாக இருக்கின்றவர்கள், பெரும் தேசியவாதம் தமிழ் மக்களுக்கு கொடுமைகளை இளைக்கின்றபோது அதற்கு பக்கபலமாக இருந்தவர்களெல்லாம் அவர்களது எஜமானர்களின் எண்ணத்து ஏற்ப கட்சியினை உருவாக்குகின்றனர்.

தேர்தல் கால திருவிழாவில் கூட்டணிகள் அமைப்பது, தமிழ் என்ற சொல்லை பயன்படுத்துவது அல்லது கூட்டணி என்ற சொல்லை பயன்படுத்துவது இப்படியெல்லாம் உருவாக்குகின்றவர்கள்  இருக்கின்றார்கள்.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் உள்ள ஒருவர், ஒரு காலத்தில் சைக்கிளில் போட்டியிட்டார், அதன்பின்னர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தார் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டார்.  இப்போது இவர் தமிழர் கூட்டமைப்பை உருவாக்கியிருக்கின்றார்களாம்.

இவ்வாறானவர்களுக்கு அரசியல் என்பது பொழுதுபோக்கு அதாவது, பத்திரிகையில், ஊடகங்களில் தமது முகங்கள் வரவேண்டும் பேச்சுக்கள் வரவேண்டும் தாங்களும் இருக்கின்றார்கள் என்பதை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக போடுகின்ற செயற்பாடாகத்தான் இருக்கும்.

சில சமயங்களில்  தேர்தல் காலம் வரும்போது கட்சிகள், அமைப்புக்கள் உருவாகும், அதேபோன்று  தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடித்து பேரினவாத சக்திகளுக்கு தீனி போடவேண்டும் என்பதற்காக, மறைமுகமாக சில பண  பரிவத்தனைகள் செய்யப்படுகின்றன. 

குறித்த எஜமானர்கள் இவர்களிடம் ஒரு தொகை பணத்தை கொடுத்திவிடுவார்கள் அவர்களும்  தமிழ் தேசிய கூட்டமைப்பின், தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்துக் காட்டுகிறேன் என்று சொல்லி போட்டியிடுவார்கள் இவர்கள் 100 வாக்குகள் அல்லது 150 வாக்குகளை எடுப்பார்கள். கடந்த மட்டக்களப்பு மாநகரசபைத் தேர்தலில்கூட ஊழலற்ற அரசியலைக் கொண்டுவரப் போகின்றோம் என்று சொல்லி கோடிக்கணக்கான பொறுமதியில் விளம்பரத்தைச் செய்து போட்டியிட்டவர்கள் கூட 17 வாக்குகள், 70  வாக்குகளை பெற்றதுதான் வரலாறு. என தெரிவித்தார். 

Recommended For You

About the Author: Satheesh

error: Content is protected !!