ரீட் மனு ஒத்திவைப்பு!

மரண தண்டனை அமுல்படுத்துவதை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு ஒக்டோபர் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனையை செயற்படுத்துவதை கைவிடுமாறு கோரி, தாக்கல் செய்துள்ள ரீட் மனுவை, ஆராய்வதற்காக, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் யசந்த கோத்தாகொட தலைமையில், ஐந்து நீதியசர்கள் கொண்ட குழாம் நியமிக்கப்பட்டது.

ஊடகவியலாளர் மலிந்த செனவிரத்னவால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த ரீட் மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.

குறித்த மனுவில் சட்ட மா அதிபர், நீதியமைச்சர், சிறைச்சாலைகள் ஆணையாளர், வெலிக்கடை சிறைச்சாலையின் அத்தியட்சகர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பன்னிரண்டு அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!