நிரந்தர கணக்காளர் நியமனம் வெற்றி

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான நிரந்தர கணக்காளர் நியமனம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் திருப்தியடைவதாக வணக்கத்திற்குரிய ரன்முத்துக்கல சங்கரத்தின தேரர் தெரிவித்தார். மேலும் இதற்காக முன்னின்று உழைத்த அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கும்; ஏனைய கட்சிகள் பொதுமக்கள் உள்ளிட்டவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.

அக்கரைப்பற்றில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில்; பாராளுமன்ற உறுப்பினரை நேரில் இன்று(17) சந்தித்த அவர்; நன்றியினை தெரிவித்துக்கொண்டதுடன் எதிர்காலத்திலும் பிரதேச செயலக தரமுயர்த்தல் தொடர்பில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார்.

இச்சந்திப்பில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்;;த்தக்கோரி உண்ணாவிரத்தை மேற்கொண்டவர்கள் சார்பில் கிழக்கு இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்த குருக்கள் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சா.சந்திரசேகரம் (ராஜன்) ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஆர்.ஜெகநதானும் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வணக்கத்திற்குரிய ரன்முத்துக்கல சங்கரத்தின தேரர் ….கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தல் விடயம் தொடர்பில் தாம் முன்னெடுத்த உண்ணாவிரதப்போராட்டத்திற்கு அரசாங்கம் விரைவான தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளதாக கூறினார். இச்செயற்பாட்டிற்காக குரல் கொடுத்த அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கும் ஏனைய கட்சிகளுக்கும் இரலு பகல் பாராது தோளோடு தோழ் நின்றுழைத்த பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

விசேடமாக இந்த நாட்டின் ஜனாதிபதி பிரதமர் அமைச்சர் வஜிர அபேவர்த்தன உள்ளிட்டவர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் இந்த நாட்டில் எந்தவொரு இனத்திற்கும் அநியாயம் நடைபெற்றாலும் அதனை தட்டிக்கேட்க ரன்முத்துக்கல சங்கரத்தின தேரர் ஆகிய நான் தயராகவுள்ளேன் எனவும் சகல இனமக்களும் இந்த நாட்டில் சாந்தி சமாதானம் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்தார்.

இதேவேளை கணக்காளர் நியமனம் தொடர்பில் பலர் பொய்யான செய்திகளை வெளியிடுவதாகவும் அதனை யாரும் நம்பத்தேவையில்லை எனவும் தெரிவித்த அவர் இது எங்களுக்கு செய்யும் அநியாயம் அல்ல எனவும் மக்களுக்கு செய்யும் அநியாயம் எனவும் அவர்கள் உணர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

எது எவ்வாறாயினும் கணக்காளர் விரைவில் தனது கடமையை பொறுப்பேற்பார் எனவும் இது தொடர்பில் யாரும் அச்சம் கொள்ள தேவையி;ல்லை எனவும் சுட்டிக்காட்டிய அவர் மக்கள் இந்த வெற்றியை அமைதியுடனும் பொறுப்புடனும் மற்றவர்களின் மனம் நோகாத வகையிலும் கொண்டாடுமாறும் கேட்டுக்கொண்டார்.

Recommended For You

About the Author: Suhirthakumar

error: Content is protected !!