மும்பை டோங்கிரியில் 4 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து தரைமட்டமானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
100 ஆண்டுகள் பழமையான அந்த கட்டிடத்தில் சுமார் 15 குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த கட்டடம் இடிந்து தரைமட்டமானதில் 11 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்பு பணியின்போது 09 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஜே.ஜே.அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (நி)