உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் பாராளுமன்றத் தெரிவுக் குழு, தமது விசாரணைகளை இன்னும் ஒரு மாதக்காலத்திற்குள் நிறைவு செய்யவுள்ளதாக ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவுக்குழுவில் சாட்சி வழங்குவதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் சட்ட ஒழுங்குள் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
ஒரு மாதக் காலப்பகுதியுள் அவர்களது சாட்சிகளைப் பதிவு செய் எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின்னர் இறுதி அறிக்கை தயாரிக்கப்படும் என்று பொன்சேகா கூறியுள்ளார்.
அதேநேரம், புலனாய்வுத்துறை பிரதானியாக நியமிக்கப்பட்டவுடன், பத்திரிகைகளில் அவரது படங்கள் வெளியாகி இருந்த நிலையில், சாட்சி வழங்கும் போது அவரது படத்தை வெளியிடக்கூடாது என்று கூறுவது வேடிக்கையானது என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும், பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறாது என்ற உறுதிப்பாட்டை வழங்க 2 ஆண்டுகள் வரையில் தேவைப்படும் என்பதோடு, முழுமையாக பயங்கரவாத சிந்தனையை இல்லாமல் செய்வதற்கு 9 ஆண்டுகள் வரையில் தேவப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.(சே)