தரகு அரசியல் செய்யும் கூட்டமைப்பு : டக்ளஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரகு அரசியலை நடாத்துகிறது என, ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்று, யாழ். நகரிலுள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எடுத்தக் கொண்டால் அவர்கள் இன்றைக்கு தமிழ் மக்களின் நலன்களுக்காகச் செயற்படுவதில்லை.

அவர்களது முழுச் செயற்பாடுகளும் தமது சுயநலன்களை முன்னிறுத்தி அரசாங்கத்தைப் பாதுகாப்பதாகவே இருக்கின்றது.

தமிழ் மக்களுக்காக பேச வேண்டிய நேரத்தில் கூட அவர்கள் அதனைப் பற்றிப் பேசாமல் அரசாங்கத்துக்கு ஆதரவான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

இந்த அரசாங்கம் பல தடவைகள் பாதுகாக்கப்பட்டது என்றால் அது கூட்டமைப்பு அரசிற்கு வழங்கிய உதவியினால் தான்.

அதனால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைத்ததா என்று பார்த்தால் மக்களுக்கு ஏதுமே கிடைக்கவில்லை, மாறாக அவர்கள் தமது சுயநலன்களைப் பாதுகாத்து சுயலாபங்களைப் பெற்றிருக்கின்றனர்.

அதிலும் சில தினங்களிற்கு முன்னர் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரனை வந்த போது கூட அரசிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அதிக தரகுப் பணத்தை கூட்டமைப்பினர் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு தங்களது சுயநலன்களுக்காக செயற்படுவதால் தான் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீராப் பிரச்சனைகளாக வைத்திருப்பதற்கு முயல்கின்றனர்.

ஆக மொத்தத்தில் கூட்டமைப்பினரைப் பொறுத்தவரையில் தமது நலன்களை முன்னிறுத்திய தரகு அரசியலையே செய்து கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் உசுப்பேத்தும் அரசியல் மக்களின் வாக்குகளை பெற உதவுமே தவிர மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஒரு போதும் உதவாது என்பதால் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

இவ்வாறாக தரகு அரசியலை கூட்டமைப்பினரும், சவப்பெட்டி அரசியலை காங்கிரஸ் கட்சியினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இரு தரப்பினரும் இரண்டு விதமான அரசியலை வைத்திருந்தாலும் இந்த அரசியலை நடாத்துவதற்கான ஒரு வேலைத்திட்டமும் கிடையாது.

அதாவது தமிழ் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்து அவர்களின் பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பது என்ற ஒரு திட்டமும் இவர்களிடத்தே இல்லை.

இதில் அபிவிருத்தி தேவையில்லலை. அரசியல் உரிமை தான் வேண்டும் என்று கேட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்றைக்கு தமிழ் மக்களுக்கு தீர்வாகப் பெற்றுக் கொடுத்திருப்பது கம்பெரலியா தான்.

அதே போல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் உள்ளுராட்சி சபைகள் வேண்டாம் என்றனர் இன்றைக்கு அந்தச் சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிட்டுள்ளனர்.

மேலும் மாகாண சபையை நிராகரிப்பதாக கூறியிருந்தார்கள், இன்றைக்கு அந்தத் தேர்தலுக்கு போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கின்றனர்.

இவ்வாறாக இவர்கள் இருவரதும் அரசியல் என்பது தரகு மற்றும் சவப்பெட்டி அரசியலாகவே பார்க்கிறோம்.

சரி பிழைகளுக்கு அப்பால் பிரபாரனிடம் வரலாறு, திட்டம் இருந்தது. அது வெற்றியோ தேல்வொ அதைப்பப்பற்றி பிரச்சனையில்லை. இன்றைக்கு சவப்பெட்டி அரசியல் கடைக்காரனுக்கு என்ன வரலாறு இருக்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக வெடி குண்டு தலைவர் மூன்று மாத கால அவகாசத்தை அரசிற்கு கொடுத்திருக்கின்றதாக அறிவித்திருந்தார்.

ஆனால் இந்த அரசசைப் பயன்படுத்த வேண்டிய வகையில் பயன்படுத்தாமல் இருந்தது மட்டுமல்லாது அரசு பயன்படுத்துவது போல செயற்பட்டிருந்தார்கள்.

அரசாங்கம் வந்த உடனேயே செய்திருக்க வேண்டிதைச் செய்யாமல் விட்டுவிட்டு இப்போது அவகாசம் என்பது வேடிக்கையானது.

தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்ப்பதில் இவர்களுக்கு அக்கறையில்லை, இவர்களைப் போன்றவர்கள் சரியான தலைமைகளும் இல்லை.

இன்றைக்கு அரசியலை நடத்துபவர்களுக்கு மக்கள் தொடர்பான அக்கறையோ பொறுப்போ இல்லலை. உண்மையில் அவர்கள் பேருக்கும் சயலாபத்திற்குமாகவே அரசியல் நடத்துகின்றனர். என குறிப்பிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!