அனுராதபுரத்தலிருந்து வடக்கிற்கான ரயில் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம்புரண்டதன் காரணமாகவே இவ்வாறு வடக்கிற்கான புகையிரத சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாகவும், தடம் புரண்ட ரயிலை தண்டவாளத்தில் நிறுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.(சே)