சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் பழுகஸ்வெல தெங்கு தோட்டத்தின் மீளாய்வு விழா, நிறுவனத்தின் தலைவர் ஆசிரி ஹேரத் தலைமையில் நடைபெற்றது.
இலங்கையில் தெங்கு உற்பத்தி முன்னோடி செயற்திட்டத்தில், தரமான தெங்கு உற்பத்திகளை வழங்கும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் பழுகஸ்வெல தெங்கு தோட்டத்தின் மீளாய்வு விழா நிறுவனத்தின் தலைவர் ஆசிரி ஹேரத் தலைமையில் நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு அதிதிகளாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகள்¸ சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதான காரியாலயத்தின் அதிகாரிகள், ஊழிய குழாமினர், தொழிலாளர்களும் விழாவில் கலந்துக் கொண்டனர்.
சர்வமத வழிபாடுகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகள் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி, கஜூஉற்பத்தி, தென்னம்பிள்ளை நாற்றுமேடை வளர்ப்பு உட்பட பல்வேறு செயற்பாடுகளை நேரில் பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து கூட்டமும் சிலருக்கு நியமனங்களும் வழங்கப்பட்டன. (நி)